அடிமனசுல என்ன நடக்கும்னு தோணுதோ அது நடக்கும்..! சிறுவன் தினேஷுடன் சூர்யா வைரலாகும் வீடியோ!

பிறக்கும் போதே தசை திசுக்கள் குறைபாடும் பிறந்தவர் சிறுவன் தினேஷ். சிறு வயதில் இருந்தே, ஓவியம் மீது அவருக்கு அதிக ஈர்ப்பு இருந்ததால், இவருடைய பெற்றோர் இவருக்கு உரிய பயிற்சி அளித்தனர். இதனால் தன்னுடைய உடல் திறனையும் மீறி அவர் ஓவியம் கற்று தற்போது சிறந்த இளம் ஓவியராக வளர்ந்து வருகிறார்.

First Published Sep 20, 2018, 5:29 PM IST | Last Updated Sep 20, 2018, 5:29 PM IST

பிறக்கும் போதே தசை திசுக்கள் குறைபாடும் பிறந்தவர் சிறுவன் தினேஷ். சிறு வயதில் இருந்தே, ஓவியம் மீது அவருக்கு அதிக ஈர்ப்பு இருந்ததால், இவருடைய பெற்றோர் இவருக்கு உரிய பயிற்சி அளித்தனர். இதனால் தன்னுடைய உடல் திறனையும் மீறி அவர் ஓவியம் கற்று தற்போது சிறந்த இளம் ஓவியராக வளர்ந்து வருகிறார்.

இவரின் கனவு உலகே திரும்பி பார்க்கும் அளவிற்கு சிறந்த ஓவியராக   வரவேண்டும் என்று தான். மேலும் இவர் தீவிர சூர்யா ரசிகர்.  அதனால் ஒருமுறையாவது நடிகர் சூர்யாவை சந்திக்க வேண்டும் என்பது அவரின் மற்றொரு கனவாக இருந்தது.  இந்த தகவல் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 

இந்த தகவலை சூர்யா ரசிகர்கள், சங்கத்தின் மூலம் அவரை அணுகி இது குறித்து தெரிவித்து தற்போது அந்த சிறுவனின் கனவை நிறைவேற்றியுள்ளார்.

இன்று சென்னையில் தினேஷ் தன்னுடைய பெற்றோருடன் சூர்யாவை சநதித்தார். சூர்யா மட்டும் இன்றி, நடிகர் சிவகுமார் மற்றும் கார்த்தியும் சிறுவன் தினேஷை சந்தித்து அவரை ஊக்கு வித்ததோடு, வாழ்த்துக்களும் பரிசு பொருட்களையும் வழங்கினர். 

இறுதியாக நடிகர் சூர்யா, தினேஷிடம் அவருக்கு ஊக்கம் கொடுக்கும் விதத்தில், நீ என்னை சந்திக்க நினைத்தது எப்படி நடந்ததோ, அதே போல் நீ நினைத்தது அனைத்தும் நடக்கும் ஆகவே உன் பெயரை கனவை எப்போது கைவிட்டு விடாதே என கூறினார். 

பிஸியாக படப்பிடிப்புகளில் நடித்து வரும் நிலையிலும், சாதிக்க துடிக்கும் ரசிகர் ஒருவரின் ஆசையை சூர்யா நிறைவு செய்துள்ளது இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.