"சூப்பர் ஸ்டார்" பட்டத்தை தூக்கிப்போட்ட ரஜினிகாந்த்..! ரசிகர்கள் ஷாக்..!

superstar rajinikanth removed his name as superstar from twitter
First Published Mar 8, 2018, 3:40 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



சூப்பர் ஸ்டார்  யாருன்னு கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லும் என்ற அளவிற்கு மக்கள் மனதில் என்றும் மிக சிறந்த இடத்தை  பிடித்துள்ளவர் தான் நடிகர் ரஜினிகாந்த்

எப்போதுமே தன்னுடைய பெயருக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தான்  இன்று  வரை அவரது படத்தில் டைட்டில் கார்டில் கூட போடபட்டிருக்கும்.

கடந்த 40 ஆண்டு கால சினிமாவில்,அவரிடம் மாறாமல் இருப்பது அவருடைய துரு துரு நடிப்பும்,அழகும் ஸ்டைலும்,கூடவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனபதுமே....

இந்நிலையில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்,அரசியலில் குதித்து உள்ளார்.தன்னுடைய  ஆன்மீக அரசியலை மக்களிடேயே கொண்டு செல்வதில் மும்முரமாக இறங்கி உள்ள  ரஜினிகாந்த்,தான் இதுவரை  ட்விட்டர் பக்கத்தில் அடைமொழியாக  தன் பெயருக்கும் முன்  சேர்த்திருந்த சூப்பர் ஸ்டார் என்பதை நீக்கி உள்ளார்..

அதாவது  ஒரு நடிகராக,ஸ்டார்  நடிகராக மட்டுமே மக்களுக்கு தெரிந்த ரஜினிகாந்த், இனி ஒரு அரசியல் வாதியாகவும் தெரிகிறார்.

இந்நிலையில்,கடந்த 2014ம் ஆண்டு டுவிட்டர் பக்கத்தில் இணைந்த ரஜினி தற்போது, அவர் பெயருடன் இருந்த அடைமொழியான சூப்பர் ஸ்டார் என்பதை நீக்கி உள்ளார்

Video Top Stories