ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: முந்துங்கள்... முந்துங்கள்... இந்தியர்களுக்கு முன்னுரிமை... ரஷ்ய மாடலின் அதிரடி அறிவிப்

சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. தலைவர் படத்தின் அப்டேட்டிற்காக மரண வெயிட்டிங்கில் இருந்த ரசிகர்கள், #Thalaivai168 என்ற ஹேஷ்டேக்கை சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்தனர். 

இதையும் படிங்க: வெற்றிமாறனால் வந்த வினை... படுக்கையறை சீனுக்கே கூப்பிடுறாங்க... பிரபல நடிகையின் வேதனை...!

அதன்படி சொன்ன நேரத்திற்கு, சொன்னபடி தலைவர் 168 படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் 168 படமான இதற்கு "அண்ணாத்த" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ வெளியிட்டுள்ளது. 

ரஜினி படத்தின் தலைப்பு வெளியான சில நொடிகளிலேயே அண்ணாத்த ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாக ஆரம்பித்துள்ளது. மாஸ் பேக்கிரவுண்ட் மியூசிக் உடன் சும்மா நச்சுன்னு வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.