டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ், காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார். இந்நிலையில் இவருடன் நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

கர்நாடக மாநிலம் பந்திப்புரா புலிகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது. இன் டு தி வைல்டு என்று பெயர் வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி 8 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. 


பியர் கிரில்ஸிடம் தான் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சுவரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டது மட்டும் இன்றி, மலை ஏற்றம், இருப்பு கம்பியை பிடித்து ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கம் செல்வது... என அனைவரையும் வியக்க வைக்கு அளவிற்கு சாகசங்களை செய்து அசத்தினார். அப்படி தலைவர் செய்த மாஸ் சாகசங்கள், இப்போது இமாலய சாதனையை செய்துள்ளன. 


அதாவது சூப்பர் ஸ்டார் பங்கேற்ற இன் டு தி வைல்டு நிகழ்ச்சி 4 பில்லியன் இன்பிரஷன்களையும், 12.4 மில்லியன் பதிவுகளையும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தலைவர்னா சும்மாவா என சந்தேஷத்தில் துள்ளிகுதிக்கின்றனர்.