கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19ம் தேதி முதல் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் எனப்படும் பெப்சியைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வேலையில்லாததால் ஒரு வேலை சாப்பாடு கூட கிடைக்காமல் கஷ்டப்படும் அவர்களுக்கு உதவும் படி பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். 

இதையும் படிங்க: அஜித்திற்கே தல சுற்றவைத்த தளபதி...“பிகில்” ஷூட்டிங் ஸ்பார்ட்டில் செய்த மாஸான காரியம்... வைரலாகும் வீடியோ...!

ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட அறிக்கையில் 15 ஆயிரம் பெப்சி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி கொடுத்தால், அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிடுவார்கள் என்றும், இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்...!

இதையடுத்து முதல் ஆளாக நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தனர். அவர்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி அளித்தார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை பெப்சி சம்மேளத்தினடம் ரஜினிகாந்த் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.