பிரபல தமிழ் திரைபட தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நடித்த “18வயசு ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் காயத்ரி ஷங்கர். பெங்களூருவில் வளர்ந்தாலும், இவரது பூர்வீகம் தமிழகம் தான். தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் அதிக படங்களில் நடித்துள்ளார். அந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் மக்கள் செல்வனுக்கு சரியான ஜோடி என்று காயத்ரியை பாராட்டியுள்ளனர். 

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் காயத்ரியை பார்த்து மெர்சலான விஜய் சேதுபதி சொன்ன “ப்பா யாரு டா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கா” என்ற வசனம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் வெளியான சமயத்தில் அதிக அளவில் மீம்ஸ்கள் தூள் பறந்தன. அந்த படத்திற்கு பின்னர்,“ரம்மி” , ,“புரியாத புதிர்,”, “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ”, ,“சூப்பர் டீலக்ஸ்”, ,“சீதக்காதி”, போன்ற படங்களிலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். 


படங்களில் இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் காயத்ரியின் தற்போதைய போட்டோவை பார்த்தால்,  “ப்பா யாருடா இந்த பொண்ணு” என்று கேட்பீங்க. அந்த அளவிற்கு மார்டன் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு நச்சுன்னு போட்டோ ஷூட் நடந்தியுள்ளார். மார்டன் மங்கையாக அவதாரம் எடுத்துள்ள காய்த்ரியின் அசத்தல் கிளிக்ஸ் இதோ....