ஆபாச படங்களின் மூலம் அனைவராலும் அறியப்பட்டு, தற்போது முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சன்னி லியோன். 

பாலிவுட்டில் ஆரம்பித்த இவருடைய திரைப்பயணம் தற்போது தமிழ்,  மலையாளம், என நீண்டு கொண்டே போகிறது. தமிழில் வீரமாதேவி என்கிற வலராற்று காவிய படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்த இவர்,  இந்தியாவில் செட்டில் ஆன பின், பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தார். மேலும் 2 குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் முதல்முறையாக, வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டது ஏன் என்பது குறித்து, மனம் திறந்துள்ளார் சன்னி லியோன். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்தும், குழந்தையை தத்தெடுப்பது குறித்தும்  பலர் பல்வேறு விதமாக பேசி வருகின்றனர்.

ஆனால் அது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை,  எனக்கு குழந்தை வேண்டும், ஆனால் அதே நேரத்தில் நான் வேலை செய்ய விரும்புகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை.  

ஒருவேளை குழந்தை பெற்று கொண்டிருந்தாள் ஒரு குழந்தை தான் பெற்றுக் கொண்டிருக்க முடியும். தற்போது மூன்று குழந்தைகள் எனக்கு இருக்கின்றனர். மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என சன்னிலியோன் கூறியுள்ளார்.