சன்னி லியோன் ஏற்கனவே, தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் ஜெய்யுடன் நடனமாடியுள்ளார். இதை தொடர்ந்து முழுமையாக பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கினார். இவர் எதிர்ப்பார்த்ததை விட பாலிவுட் திரையுலகில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்களும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது தமிழில், 'வீரமாதேவி' என்கிற வரலாற்று காவிய படத்தில் வீர பெண்மணியாக நடித்து வருகிறார். இதைதொடர்ந்து மலையாளத் திரையுலகிலும் கால்பதிக்க உள்ளார் என தகவல் வெளியாக உள்ளது.

ஆரம்ப காலத்தில் ஆபாசப்படங்களில் நடித்து,  பிரபலமானார். தன்னுடைய வாழ்க்கை பற்றி விளக்கும் விதத்தில் கரன்ஜித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு சன்னி லியோன் கேரளா வந்தபோது அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அப்போது மலையாளத் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறி வந்தார். தற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குநர் ஒமர் லுலு இயக்குகிறார்.

இந்தப் படத்தில் இவருடன், மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் மற்றும் ஹனிரோஸ் நடிக்க உள்ளனர் என கூறப்படுகிறது. படத்தின் கதைக் களம், மற்றும் மற்ற அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.