ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், 2012ம் ஆண்டு வெளியான "ஜிம்ஸ் 2" என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'ஜாக்பாட்', 'ராகினி' 'எம்.எம்.எஸ்.2', 'ஹேட் ஸ்டோரி 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் சன்னி, தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரே பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். 

கூகுளில் அதிகம் தேடப்படும் நபர்களில் முதலிடம் பிடித்துள்ள சன்னி லியோனுக்கு இந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டாலும், ரசிகர்களை ஹேப்பியாக்குவதற்காக தனது ஹாட் போட்டோஸை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். சினிமா, விளம்பர படங்கள் என படு பிசியாக இருக்கும் சன்னி லியோன், சமீபத்தில் எடுத்துள்ள அதிரடி முடிவு ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. 

அதாவது  இன்டர்நெட் யுகத்தில் சினிமாவை விட இளசுகளை அதிகம் கவர்வது வெப் சீரியஸ் தான். நெட் பிளிக்ஸ், அமேசான் என வெப் தொடர்களின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்த சன்னி லியோன், விரைவில் வெப் தொடரில் நடிக்க உள்ளராம். 

அதுல என்ன ரசிகர்கள் யோசிக்க வேண்டியிருக்குன்னு தானே கேட்குறீங்க...?. சன்னி நடிக்க போற வெப் தொடர் அப்படி. ஏன்னா காமெடி வெப் தொடரில் தான் நடிக்கப்போறாங்க. அளவில்லாத கவர்ச்சிக்கு பெயர் போன சன்னிக்கு, இந்த காமெடி ரோல் செட்டாகுமா...? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன் மூலம் கிடைக்கும் தனது சம்பளத்தை மும்பையில் உள்ள செயின்ட் கேத்தரின்ஸ் அனாதை இல்லத்துக்கு கொடுக்க உள்ளாராம் சன்னி லியோன். என்ன ஒரு உயர்ந்த முடிவு.