விஜயுடன் மோதிய பிரபல ஸ்டண்ட் நடிகர் மாரடைப்பால் மரணம்…

இளைய தளபதி விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருடன் சண்டைக்காட்சிகளில் மோதிய  பிரபல ஸ்டண்ட் நடிகர் விஜய் சூர்யா இன்று மாலை மாரடைப்பால மரணம் அடைந்தார்.

stunt actor vijay soorya dead

நடிகர் விஜய் நடித்து கடந்த 2104 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசான படம் தான் ஜில்லா. இந்தப்படத்தை  சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்திருந்தது. பெரு வெற்றி பெற்ற இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு அதிக முக்கியத்தவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது.

stunt actor vijay soorya dead

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இந்தப்படத்துக்கு சண்டைக் காட்சிகளை அமைத்திருந்தார். அந்தப்படத்தில் விஜயடன் மோதும் பல சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தவர்தான் விஜய் சூர்யா.

சென்னை கொருக்குப் பேட்டை பகுதியில் வசித்து வந்த இவருக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உறவினர்களும் நண்பர்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

stunt actor vijay soorya dead

ஆனால் போகும் வழிறிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் தற்போது கொருக்குப் பேட்டை டேனியல் பள்ளி அருகில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஸ்டண்ட் நடிகர் விஜய் சூர்யாவின் மறைவு சண்டை கலைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios