Asianet News TamilAsianet News Tamil

வீட்டிற்குள் இருப்பது மட்டுமே தீர்வாகாது... தமிழக அரசுக்கு உலக நாயகன் கமலின் எச்சரிக்கை...!

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

Stay at home is not a only awareness Kamal Hassan Urge Tamilnadu Government
Author
Chennai, First Published Mar 27, 2020, 4:27 PM IST

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 170க்கும் மேற்பட்ட நாடுகளை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து சீனா மீண்டும் வரும் இதே தருணத்தில் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். 

Stay at home is not a only awareness Kamal Hassan Urge Tamilnadu Government

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

இந்தியாவில் வைரஸ் தாக்குதலால் 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்கு மேலும்  6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை மீண்டும் மீட்டெடுப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கிரண்... கொரோனாவை விட மிரட்டும் கவர்ச்சி..!

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசிற்கும் கோரிக்கை விடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios