“விவாதத்திற்கு வந்தால் கட்டாயம் நீங்கள் தோற்றுப்போவீர்கள்  என சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு மாஸ்டர் ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்றுள்ளார்.

தென்னிந்தியா சினிமாவை ஜாம்பவான்களை அலறவிட்ட ஹாட் நடிகை ஸ்ரீ ரெட்டி சினிமா சான்ஸ் தருவதாகக் கூறி  படுக்கைக்கு அழைத்ததாக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது  பகிரங்கமாக மீடியா முன்பு நிர்வாண கோலத்தில் போராட்டம் நடத்தினார். 

இதனை அடுத்து தமிழில் ஸ்ரீகாந்த், முருகதாஸ், சுந்தர்.சி, மாஸ்டர் ராகவா லாரன்ஸ் என 5-க்கும் மேற்பட்ட நடிகர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தினார்.

இந்நிலையில், இதுவரை ஸ்ரீ ரெட்டியில் குற்றச்சாட்டுக்கு லிஸ்டில் இருந்தவர்கள் யாரும் பதிலளிக்காமல் இருந்த நிலையில், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “உங்களது அனைத்துப் பேட்டிகளையும் பார்த்து உங்கள் மீது பரிதாபப்படுகிறேன். உங்கள் பிரச்சினை தான் என்ன? வாய்ப்பு தருவதாகக் கூறி அனைவரும் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது தானே? தான் ஒரு சிறந்த நடிகை என்று கூறுகிறீர்கள். நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம். அப்போது நான் ஒரு சிம்பிள் டான்ஸ் ஸ்டெப் மற்றும் ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கிறேன். 

அனைவர் மும்பும் நீங்கள் உங்கள் திறமையை நிரூபித்துவிட்டால், எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன்.
 நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே உங்களை நேரில் சந்திப்பதில் எனக்குப் பயமில்லை. எனது படத்தில் நீங்கள் நடிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளன. ஒருவேளை அனைவர் முன்பும் நடித்துக் காட்ட விருப்பமில்லை எனில், எனது மேனேஜரை தொடர்பு கொண்டு, உங்களது வழக்கறிஞர்கள் மற்றும் உங்களது நலம் விரும்பிகள் முன்பு நடித்துக் காட்டுங்கள். நான் கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன்” என்று லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “விவாதத்திற்கு வந்தால் கட்டாயம் நீங்கள் தோற்றுப்போவீர்கள். உங்களுக்குச் சரி என்றால் நாம் உங்கள் படத்தில் பணியாற்றுவோம். நான் திறமையானவள் தான். உங்கள் திறமையைப் பார்த்துள்ளேன். நமது கூட்டணியை மற்றவர்கள் பார்க்கட்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

அடுத்த பதிவொன்றில், “ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் சவாலை ஏற்கிறேன். அனைவரும் எனக்கு ஆசி வழங்குங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஒரு வீடியோ இணைப்பைப் பகிர்ந்து, “ராகவா மாஸ்டர் இது என் திறமைக்கான மாதிரி. இது உங்களுக்காகவே செய்துள்ளேன். வரவுள்ள எனது படத்தின் வசனங்கள் உள்ளன. இதில் கெட்ட வார்த்தைகள் இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.