ஸ்ரீரெட்டியின் சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் நடிகர்...! இவ்வளவு மோசமானவரா...?

srireddy leaked the next tamil actor name
First Published Jul 15, 2018, 6:15 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில், தெலுங்கு பிரபலங்கள், பலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டியின் பார்வை தற்போது தமிழ் திரையுலகின் மீது திரும்பி உள்ளது.

இதனால் தொடர்ந்து அவரிடம் தவறாக நடந்து கொண்ட தமிழ் பிரபலங்கள் பற்றிய தகவல்களை வரிசையாக வெளியிட்டு வருகிறார்.  

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரண்ஸ் ஆகியோரின் பெயர்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில்  ஸ்ரீரெட்டி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்நிலையில் தற்போது நெஞ்சில் துணிவிருந்தால், மாநகரம், உள்ளிட்ட படங்களில் நடித்து வளர்ந்து வரும் இளம் நடிகர் சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், இந்த பூமியிலேயே மிகவும் மோசமான அணுகுமுறை கொண்ட மனிதர்,  என்று  இவரை ஸ்ரீரெட்டி குறிப்பிட்டு கேவலமாக விமர்சித்துள்ளார். இந்த தகவல் இவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.