தமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...! வைரலாகும் வீடியோ...!
ஸ்ரீரெட்டியும் தற்போது பேட்டிகள் கொடுப்பதில் செம பிஸியாக இருக்கிறார். மேலும் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் சமூக ஊடகங்களிலும் ஒரு சில வெடிகளை கொளுத்தி போட்டு வெடிக்கவைக்கிறார்.
இதனால் இவர் மீது தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் மிகவும் கோபத்தில் உள்ளனர். எனினும் இவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் பிரபலங்கள் யாரும் இவர் மீது நடிகர் சங்கத்தில் எந்த புகார்களும் கொடுக்காததால் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று தமிழ்லீக்ஸ்க்கு லீவு விட்டுள்ள ஸ்ரீரெட்டி சில தமிழ் இளைஞர்களுடன் டப்மேட்ச் செய்த வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் "தனக்கு மிகவும் பிடித்த டப்மேட்ச் என கூறி, ஒரு தமிழ் பையனுடன், தமிழில் எடுக்கப்பட்ட டப்மேட்ச் வீடியோ ஒன்றை ஃபேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் என்ன பேசி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.