ஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...! நெஞ்சை உருக்கிய வார்த்தைகள்..!
இவர் நீதிக்காக போராடி வரும் நிலையிலும், இவருடைய வார்த்தைகளுக்கு நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இதுவரை செவி சாய்க்கவில்லை. இதனால் ஸ்ரீரெட்டி தற்போது புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அனைத்து ஊடகங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார்.
இதுவரை தான் கூறும், குற்றச்சாட்டுகளுக்கு 90% சதவீதம் ஆதாரம் உள்ளதாக கூறும் ஸ்ரீரெட்டி, எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளார். மேலும் இந்த தகவல்களை நேரம் வரும் போது போலீஸ் அதிகாரிகள் போன்றவர்களிடம் ஒப்படைப்பேன் என்று கூறுயுள்ளார்.
கடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் ஒரு தமிழ் நடிகரின் பெயரை வெளியிட்டு வந்த இவர் நேற்றைய தினம் தமிழ்லீக்ஸ்க்கு லீவ் விட்டு விட்டு, இவர் தமிழில் பேசிய டப்மேட்சுகளை வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட்டு அதில் மிகவும் உருக்கமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளது..." அம்மா உயிரோடு இருந்திருந்தால் நான் நீதி பெற்றிருக்க முடியும். ஏதேனும் ஒரு பார்வையாவது என்னை காப்பாற்ற வேண்டும். அம்மா நீங்கள் அனைத்து பெண்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று கூறி, பாலியல் ரீதியான குற்றங்களை 'cash commity' என்கிற அமைப்பு மூலம் முன்னெடுத்து செல்லாம் என உச்ச நீதி மன்றமே உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் ஏன் என்னுடைய குரலை யாருமே கண்டுகொள்ள மறுக்கிறார்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.