நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிப்பில் கடந்த வருடம் 'தடக்' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.  இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ஒரு சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை அவர் நடிக்க உள்ள படம் குறித்து எந்த அதிகார பூர்வா தகவலும் வெளியாகவில்லை.

சமீபத்தில் கூட, ஜான்வி கபூர் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீ தேவியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதே போல் பிங்க் படத்தின் ரீமேக்கிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் ஜான்வி, உச்ச கட்ட கவர்ச்சியில், போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அதன் புகைப்படத்தை வெளியிட்டுளளார். இதனை பார்த்து நெட்டிசன்கள் பலர், பட வாய்ப்பு பெறுவதற்காக ஜான்வி இந்த முறையை கையாளுகிறாரா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகிறார்கள்.

அந்த புகைப்படம் இதோ: