தெலுங்கு திரை உலகை ஒரு வழி பார்த்துவிட்டு தற்போது தமிழ்  சினிமா பக்கம் திரும்பி உள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

நடிக்க வாய்ப்பு தர தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பல நடிகர்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்து வந்தார்.

இந்நிலையில் தமிழ் சினிமா பக்கம் திரும்பி உள்ள ஸ்ரீ ரெட்டி, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார்.

அப்போது, சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இத்தனை பேருடன் படுக்கையை பகிர்ந்தேன் என சொல்வது நியாயமா..அது எப்படி எல்லோருடன் முடியும்..?

"சன்னி லியோன் ஜென்யூனா என்று பதில் அளித்துள்ளார். சன்னி லியோனை இந்த உலகம் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. ஆனால் நான் எவ்வளவு வலியுடன் இங்கு வந்து என்னுடய வேதனையை தெரிவித்து வருகிறேன்...ஆனால் அதனை யாரும் கண்டுக்கவில்லை" என தெரிவித்து உள்ளார்.

குடும்பத்தை பற்றி தெரிவிக்கும் போது, பத்து வருடத்திற்கு முன்னதாகவே, தான் குடும்பத்தை விட்டு பிரிந்து  வந்துவிட்டேன்..அன்று முதல் இன்று வரை தனி ஆளாக சினிமாவில் போராடி வரும் போது தான், இப்படிப்பட்ட  இன்னல்களுக்கு ஆளாகினேன்..கடந்த ஐந்து வருடமாக என்னுடைய வாழ்க்கை இப்படி தான் போனது...பொருத்தது போதும் என்று  தற்போது தான் நான் விழித்துக்கொண்டு உள்ளேன்.

என்னை போன்று மற்ற பெண்கள் யாரும் இது போன்று, பாதிக்கக்கூடாது என தெரிவித்து இருந்தார்.

மேலும், தன்னுடைய நிலைமை அறிந்து யாரேனும் திருமணம் செய்துக்கொள்ள முன் வந்தால், அதை பற்றி நான் சிந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.