ஒவ்வொரு டிவி சேனல் படி ஏறி வரும் ஸ்ரீ ரெட்டி..! போட்டுடைத்த அடுத்த விவகாரம்..!

கோலிவுட் முடித்துக்கொண்டு, டோலிவுட் பக்கம் திரும்பி உள்ள ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் தான் உள்ளார்.

இவர் இன்று காலை முதல் மிகவும் பிசியாக ஒவ்வொரு டிவி சேனல்களுக்கும் சென்று நேர்காணல் கொடுத்து வருகிறார்.

அதில் நெறியாளர் கேட்கும் பல தரப்பட்ட கேள்விகளுக்கு தில்லாக மன உறுதியுடன்,குறிப்பிட்ட இயகுனர்கlள் மற்றும் நடிகர்கள் பற்றி போட்டு கிழித்து உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

தெலுங்கு சர்ச்சை நாயகியான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பிற்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

கடந்த மாதம் முழுவதும் தெலுங்கு திரை நட்சத்திரம் பற்றி வாய் திறந்த  ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் நடிகர் மற்றும் இயக்குனர்களை பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்

அந்த வரிசையில், கோலிவுட்டில் முதலில் சிக்கியது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்,  பின்னர் நடிகர் ஸ்ரீ காந்த், நடன இயக்குனர் லாரன்ஸ், தற்போது சுந்தர் சி.

இதற்கு அடுத்த படியாக வேறு யார் பெயரெல்லாம் இழுக்க போராங்களோ என சற்று கலக்கத்தில் உள்ளனர்.

இதற்கு முன்னதாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் நடிகை ஹன்சிகா, தமன்னா,காஜல்,சமந்தா என அனைவரையும் இழுத்து உள்ளார்.

அதாவது, "ஒரு சிலர்  நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்னுடைய லிஸ்ட் மிக பெரியது என்று...ஆனால் ஹன்சிகா, தமன்னா,காஜல்,சமந்தா இவர்கள் லிஸ்ட் ஓபன் செய்தால் தானே தெரியும்....யாருக்கு பெரிய  லிஸ்ட் என்று...என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதுவரை தன்னுடைய பேஸ்புக் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்த ஸ்ரீ ரெட்டி தற்போது தொலைக்காட்சி வாயிலாக பேட்டி கொடுக்க வந்துள்ளார்.

இது ஒரு பக்கம்  இருக்க, அவர் பதிவிட்ட வீடியோவில் சென்னையை  நம்பி வருவதாகவும் இங்கு தான் தீர்வு  கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்து இருந்தார்.