தெலுங்கு திரைப்படத்துறையில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறதுஎன்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர்என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமா தவிர தமிழ் சினிமாவிலும் அத்தகையபோக்கு இருப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், பிரபல இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார்களை அடுக்கினார்.


 
மேலும், சென்னை வந்து, இங்கேயே தங்கி கலைச்சேவை ஆற்றப்போவதாக கூறிய ஸ்ரீரெட்டி, தனது வாழ்க்கையையே மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வரும் `ரெட்டி டைரி' என்ற தற்போது நடித்து வருகிறார்.இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் கூறியிருந்தஸ்ரீரெட்டி, ராஜேந்திர பிரசாத் மன ரீதியாக பாதிக்கப்பட்ட மனிதர், தயவு செய்து அவரை மனநலமருத்துவமனையில் அனுமதியுங்கள் என்று கூறி, எரிந்து கொண்டிருக்கும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியுள்ளார்.


 
ஸ்ரீரெட்டி எழுதியுள்ளது இதுதான். “ ராஜேந்திர பிரசாத் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர். ராஜேந்திர பிரசாத்தின் அகராதியில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்பது தெரியும். உங்களைப் பற்றிய தெளிவான ரகசியங்களைவிரைவில் வெளியிடுகிறேன் என்று தெரிவித்திருந்தார். தற்போது, மேலும் பதிவை பேஸ்புக்கில் நடிகை ஸ்ரீரெட்டி பதிவேற்ற்யிள்ளார். அதில், மாளவிகா நடிப்பதை நிறுத்துவதற்கு காரணம் தெலுங்கு பிரபல நடிகர் ராஜேந்திர பிரசாத் தான் என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீரெட்டி தனது பதிவில், ``தெலுங்கு நடிகர்கள் கூட்டமைப்பான மா சங்கத்திலிருந்து 6 மாதத்தில் வெளியேறகாரணம் என்ன? அது குறித்து அனைவரும் அறிவார்கள். நடிகை மாளவிகா திரைத்துறையிலிருந்து திடீரென ஏன்ஒதுங்க வேண்டும்? ராஜேந்திர பிரசாத் பெண் கலைஞர்கள் பலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியும். அவரின் மகள் ஏன் வீட்டைவிட்டு ஓடினார்? நடிகை ஹீமா ஏன் உங்களுடன் ஏன் சண்டையிட்டார்? மூத்த நடிகர் என்ற பெயரில் உங்கள் மேல் மரியாதை வைத்துள்ளேன். ஆனால் மனிதனாக அல்ல” என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.