"கிரீன் பார்க் ஓட்டல்" ஞாபகம் இருக்கா..? "டைரக்டர் முருகதாஸ்" மிரட்டிய ஸ்ரீ ரெட்டி...!

sri reddy posted a news regarding ar murugadoss and he shocked
First Published Jul 11, 2018, 7:15 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



"கிரீன் பார்க் ஓட்டல்" ஞாபகம் இருக்கா..? "டைரக்டர் முருகதாஸ்" மிரட்டிய ஸ்ரீ ரெட்டி...!

தெலுங்கு திரைப்பட நடிகையான ஸ்ரீ ரெட்டி, வாய்ப்பு தர இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த சில நடிகர்கள் பெயரை குறிப்பிட்டு, அவர்களுடன் எடுக்கபட்ட புகைப்படத்தை ஆதாரமாக வெளியிட்டு பல்வேறு புகார்களை வைத்தார்

இதனால், ஸ்ரீ ரெட்டியுடன் நடிக்க தடை விதித்து இருந்தது நடிகர் சங்கம். இதற்கு போர்க்கொடி தூக்கி, நடிகர் சங்கம் முன் அரைநிர்வாண  போராட்டம் நடத்தினார்.

பின்னர் நடிகர் நானி மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், தமிழ் இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து உள்ளார்

தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சர்க்கார் பட  இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மீது  பாலியல் புகாரை முன் வைத்து உள்ளார்.

அதில்," முருகதாஸ் ஜி....எப்படி இருகீங்க...? கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கா..?  நம்ம வெலிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் தெரியவந்தோம்  ....எனக்கு ஒரு வாய்ப்பு  கொடுப்பதாக சொன்னீங்க......ஆனால் நாம நிறைய முறை........இருந்தாலும் இதுவரை எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.....நீங்களும் சிறந்த மனிதர் " என ஆங்கிலத்தில் பதிவு செய்து உள்ளார். இந்நிலையில், இந்த பதிவு பெரும் சர்ச்சை கிளப்பி உள்ளது. பெருத்த எதிர்பார்ப்புக்கிடையில் விஜய் நடித்து வெளியாக  உள்ள சரக்கார் படம்  மக்களிடேயே நல்ல வரவேற்பை பெரும் வெற்றி நடையோடு  நடந்து  வருகிறார் முருகதாஸ்

இந்நிலையில் தன் தலையில் விழுந்த இடி போல ஸ்ரீ ரெட்டியின் பதிவு  அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.