சர்ச்சை நடிகை ஸ்ரீ  ரெட்டி தற்போது சென்னை வந்து தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்ப கொடுப்பதாக கூறி, ஏமாற்றியவர்கள் மீது புகார்கள் கூறி வருகிறார்.

இது குறித்த கருத்து மற்றும் யாரை அவர் எங்கு சென்று சந்தித்தார்..அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்..? எதற்காக இந்த சந்திப்பு என முழு விவரத்தையும் தன்னுடைய முகநூல் பக்கக்கதில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில்,தெலுங்கில் நடிகர் நானி முதல், தமிழில் ஏ.ஆர் முருகதாஸ்,ஸ்ரீகாந்த், சுந்தர் சி, நடன இயக்குனர் லாரன்ஸ் என பெயர் பட்டியல் போட்டு தொடர்ந்து வெளியிட்டு வந்தார் ஸ்ரீ ரெட்டி

இந்நிலையில் தற்போது  சென்னை வந்துள்ள ஸ்ரீ ரெட்டி பல்வேறு தொலைக்காட்சிக்கு  பேட்டி கொடுத்து வருகிறார்.பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தான் எப்படி தெலுங்கு சினிமாவிற்கு வந்தேன் என்பதை கூறி உள்ளார்.

அதில், "ஆரம்பத்தில் நான் சில செய்தி சேனல்களில் வேலை பார்த்து வந்தேன்...செய்தி வாசிப்பாளராகவும் இருந்தேன்...அப்போது கிடைத்த சில நட்பு வட்டாரங்கள் மூலம்  சினிமாவிற்கு  செல்ல நேரிட்டது ...ஒரு சில இயக்குனர்கள் என்னை நேரடியாகவே  அணுகினர். நீ அழகாக இருக்கிறாய்..செய்தி வாசிப்பதன் மூலம் என் திறமை வெளிப் படுவதை விட சினிமாவில் நான் முன்னேறி விடலாம் என கூறினார்கள்..எனக்கும் சரி என்று பட்டது..இப்படி தான் சினிமா துறைக்கு வந்தேன்...

 இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார் ஸ்ரீ ரெட்டி.