மீடூ புகார்களுக்கு முன்பு மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது ஸ்ரீரெட்டி விவகாரம். சினிமா வாய்ப்பிற்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதாக ஸ்ரீரெட்டி கூறிய புகார், தெலுங்கு திரையுலகையே அதிர வைத்தது. தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழில் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், விஷால் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் மீது மீண்டும் ஸ்ரீரெட்டி கூறியிருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்றே, உங்களுக்கு தெரியவில்லை. பவன் பல இளம் பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார். பல பெண்களுடன் விளையாடுவார், பல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். அவரால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் புகார் கொடுக்க தயாராக உள்ளனர் என்று பவன் கல்யாண் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

மேலும் தான் இன்னும் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டு தான் இருப்பதாகவும், சிலர் பவன் கல்யாணையும், அவரது தொண்டர்களையும் பார்த்து பயந்து சென்னைக்கு ஓடிவிட்டதாக வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பவன் கல்யாண், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பற்றி பேச எவ்வித தகுதியும் இல்லை என ஆவேசமாக பதிலளித்துள்ளார்.  மேலும் பவன் கல்யாணால் ஆந்திர முதலமைச்சராக மட்டுமல்லா, ஒரு வார்டு கவுன்சிலராக கூட வர முடியாது என்றும் கொந்தளித்துள்ளார் ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் மீண்டும் ஸ்ரீரெட்டி புயல் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. இனி டோலிவுட்டில் யார் மண்டை எல்லாம் உடையப்போகுதோ....!