நயன்தாரா, திரிணா, சமந்தா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி மற்றும் பிரபல நடிகைகள் பலரும் எண்ணற்றவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் என ஸ்ரீரெட்டி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

 தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள் என பலர் மீது பாலியல் புகார் அளித்தவர் ஸ்ரீரெட்டி. மேலும் ஒவ்வொருவரும் தன்னை எப்படி படுக்கையில் பயன்படுத்திக் கொண்டனர் என்பதையும் ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறி வருகிறார். தற்போது தமிழ் நடிகர்கள் மீதான பாலியல் புகார்களை ஸ்ரீரெட்டி கூறத் தொடங்கியுள்ளார்.

 ஏ.ஆர்.முருகதாசிடம் ஆரம்பித்த ஸ்ரீரெட்டி தொடர்ந்து ஸ்ரீகாந்த், லாரன்ஸ் மற்றும் சுந்தர் சி ஆகியோர் தனகுக் வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையில் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீரெட்டி தெரிவித்தார். மேலும் பலர் தன்னை ஏமாற்றியிருப்பதாகவும், அவர்களின் விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி கூறி வருகிறார். ஆனால் ஸ்ரீரெட்டி ஏன் இத்தனை பேருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார் என்று ஒரு தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது. மேலும் ஸ்ரீரெட்டியுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களின் பட்டியல் மிகப்பெரியது என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த கிண்டல்களுக்கு ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களின் பட்டியலில் மிகப்பெரியது என்று அனைவரும் சொல்கிறார்கள். ஆனால் சில நல்ல நடிகைகள் இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் நல்ல நடிகைகள் தான். ஆனால் அவர்கள் முன்னணி நடிகைகளாக இருக்கிறார்கள். நயன்தாரா, திரிஷா, சமந்தா, காஜல் ஆகியோர் வாய் திறக்கவில்லை.

நயன்தாரா, திரிஷா, சமந்தா, காஜல் வாய் திறந்தால் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களை விட அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களின் பட்டியல் எவ்வளவு பெரியது என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார். ஆனால் நடிகைகள் பெயரை ஸ்ரீரெட்டி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக நடிகைகளின் பெயரின் முதல் இரண்டு எழுத்து மற்றும் நடு எழுத்து மற்றும் கடைசி எழுத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் ஸ்ரீரெட்டி கூறியிருப்பது நயன்தாரா, திரிஷா, சமந்தா மற்றும் காஜல் தான் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதுநாள் வரை நடிகர்களின் மானத்தை வாங்கி வந்த ஸ்ரீரெட்டி தற்போது நடிகைகளின் மானத்தை காற்றில் பறக்கவிடத் தொடங்கியுள்ளார்.