வீட்டிற்கே வர வேண்டாம் என கூறிய ஸ்ரீ ரெட்டியின் அம்மா..! மனம் நொந்து ஸ்ரீ ரெட்டி...!

நடிகை ஸ்ரீ ரெட்டியை வீட்டிற்கே வர வேண்டாம் என அவருடைய தாயார் கூறியதாக மன வேதனையுடன் கூறி உள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஸ்ரீ ரெட்டி, அவர் சந்தித்து வந்த பிரச்சனை மற்றும் அவருடைய பதிவால் ஸ்ரீ ரெட்டியின் குடும்பத்தினர் மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

ஸ்ரீ ரெட்டியின் குடும்பத்தினர், மற்றும் அவர்களுடைய உறவினர்கள் என அனைவரும் ஸ்ரீ ரெட்டியின் நடவடிக்கையால் இந்த சமூதாயம் அவர்களை எப்படி பார்க்கிறது என்றும்..இதனால் தான் எந்த அளவிற்கு அவமானத்தை சந்தித்து உள்ளேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும், தன்னுடைய அம்மா, தன்னை வீட்டிற்கு வர வேண்டாம் எனவும்...நீ எல்லாம் என் மகளாக பிறந்து இருக்கீயே என என் அம்மாவே  சொல்லிட்டாங்க என பேட்டியின் போது மன வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.

மேலும்,தான் பெற்ற இந்த அனுபவம் இனி வேறு யாரும் பெற கூடாது என்றும்,வேறு எந்த பெண்ணும் தன்னை போல் பாதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.