உயிர் கொல்லி எனப்படும் ஹெச்ஐவி தொற்று ஏற்படவில்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டர்கள். ஏனெனில் தெலுங்கையடுத்து தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது சென்னைக்கு வந்துள்ளார்.

ஸ்ரீ ரெட்டி சென்னைக்கு வந்த கையோடு ஃபேஸ்புக் லைவில் வந்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றார். அவர் யார், யார் பெயரை எல்லாம் வெளியிடப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தன்னை போன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய சென்னை வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த 3 நாட்கள் என்ன நடக்கப் போகிறதோ என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக் லைவில் வந்து ரசிகர்கள் கேட்ட கேள்வி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இத்தனை ஆண்களுடன் இருந்திருக்கிறீர்களே உங்களுக்கு இன்னும் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படவில்லையா? என்று ரசிகர் ஒருவர் ஸ்ரீ ரெட்டியிடம் கேட்டார்.

இதற்கு பதில் அளித்த அவர் உங்களின் அக்கறைக்கு நன்றி மிஸ்டர் என்று தொடங்கினார். ஆணுறைகள் பற்றி உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். செக்ஸ் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்றார். மேலும் என்னை காத்துக் கொள்ளவும் தெரியும். 4 மாதங்களுக்கு ஒரு முறை ஹெல்த் செக்அப் செய்வேன்.

என்னிடம் பணம் இல்லை ஆனால் உடல்நலம் உள்ளது. ஹெச்.ஐ.வி. இல்லை காய்ச்சல் வந்தால் கூட இறந்துவிடலாம் என்று பதில் அளித்துள்ளார். பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார்கள் என்று நான் விளம்பரம் தேட கூறவில்லை. திரைவுலகில் இனி இது போன்று நடக்காமல் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்