சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரெட்டி, இயக்குனர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் ஸ்ரீகாந்த் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டது உண்மை தான் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.  தன்னை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த வராகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஸ்ரீரெட்டி ஒரு புகார் அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரெட்டி, தமிழ் திரையுலகிலாவது எனக்கு நியாயம் கிடைக்கும் என்று வந்தேன், ஆனால் தெலுங்கு திரையுலகை விட தமிழ் திரையுலகில் மிகவும் மோசமாக என்னை நடத்துகிறார்கள்.

நான் விளம்பரத்திற்காகவோ, பணத்திற்காகவோ நடிகர்கள் மீது புகார் அளிக்கவில்லை. ஒரு நடிகையை திரையுலகில் எப்படி எல்லாம் யூஸ் செய்து விட்டு குப்பையை போல் தூக்கி எறிகிறார்கள் என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்பினேன். சொல்லிவிட்டேன். ஆனாலும் திரையுலகில் உள்ளவர்கள் தொடர்ந்து எனக்கு எதிராக அவதூறு செய்கிறார்கள்.

பட வாய்ப்புக்காக நான் அட்ஜஸ்ட் செய்து கொண்டது உண்மை தான். ஆனால் எந்த ஒரு நடிகரும் எனக்கு 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை. என்னை விபச்சாரி என்று கூறும் வராகி யாரிடம் இருந்தாவது எனக்கு பணம் வாங்கி கொடுத்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது தமிழ் இயக்குனர் முருகதாஸ், நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த் மீது பாலியல் புகார் கூறினீர்களே? அது உண்மை தானா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நான் கூறுவது எல்லாமே சத்தியம். முருகதாஸ் என்னை ஓட்டலில் வைத்து பயன்படுத்திக் கொண்டார். ராகவா லாரன்சும் தன்னுடைய பாலியல் பசிக்கு என்னை யூஸ் செய்தார். நடிகர் ஸ்ரீகாந்த் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்டார். இவை அனைத்துமே சத்தியம் என்று கூறிவிட்டு புறப்பட்டார்.