தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

முக்கிய பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த இவர், அதற்கான ஆதாரங்களை , SRI LEAKS என்ற வலைதளபக்கத்தில் பதிவிட்டு பூகம்பத்தை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள இவரிடம் "யாரிடமாவது படுக்கையயை பகிர்ந்து கொள்ள முடியாது என எதிர்த்து சண்டை போட்டதுண்டா என கேள்வி எழுப்பப்பட்டது".

இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீரெட்டி "ஒரு சம்பவத்தை சொல்லி இருக்கிறார்"... தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த கோனா வெங்கட் என்ற இயக்குனரை ஸ்ரீரெட்டி சந்திக்க சென்றபோது தான் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாம்.

மாலை 5 மணிபோல் கோனா வெங்கட்டை சந்திக்க தான் ஒரு கெஸ்ட் ஹவுஸ் சென்ற போது, முதலில் அவர் தன்னிடம் ஏதாவது டிரிங்க்ஸ் சாப்பிடுறீங்களா என்று கேட்டார். 

எனக்கு ஒயின் சாப்பிடும் பழக்கம் உண்டு, ஆனால் அன்று எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம் ட்ரிங்ஸ் சாப்பிட்டால் ஒருவேளை நான் சுநினைவு இழந்து என்னையும் மீறி எதுவாவது நடந்து விடும் என்கிற பயம் தான். அப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவருக்கு கொடுக்க கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். 

இருப்பினும் நான் எதிர்ப்பார்க்காத நேரத்தில் என்னுடைய அருகே வந்த அவர் என் டீசர்ட்டை கழற்றினார். என் அனுமதி இல்லாமல் என்னுடைய உடையை கழற்றியதால் அதிர்ச்சி அடைந்தேன். உடனே என்னை கன்வின்ஸ் பண்ண ஆரம்பித்தார். எல்லா ஆண்களுமே தப்பு செய்வதற்கு முன்னால் பெண்ணை கன்வின்ஸ் செய்ய முயற்சிக்கிறார்கள் அதில் வெற்றியும் அடைகிறார்கள் என கூறியுள்ளார். 

குறிப்பாக அவர் தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி தன்னுடைய அம்மா, குழந்தைகள் மேல் கூட சத்தியம் செய்தார் என கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.