பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய அவர் நடிகைகள் கவர்ச்சி உடைகள் அணிவதை கடுமையாக விமர்சித்தார். இது அங்கு ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக கதாநாயகிகள்,  சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் போது அரைகுறையாக, ஆபாச உடை அணிந்து உடம்பை காட்டுகிறார்கள். பொது நிகழ்ச்சியில் எப்படி உடை அணிய வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு இல்லை.  கவர்ச்சி உடை அணிந்து உடம்பை காட்சிப்பொருளாக காட்டினால்தான், அந்த விழாவிற்கு வரும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்கிறார்களா?   என தெரியவில்லை.

நமது கலாச்சாரம்,  சமூக உணர்வு எதுவுமே அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. நான் இப்படி பேசுவதால் நிறைய நாயகிகளுக்கு கோபம் வரலாம், ஆனால் அவர்களுக்கு தெலுங்கு தெரியாது என்றார். 

இவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி-யின் பேச்சு தற்போது  தெலுங்கு டெலிவிஷன்களில் விவாதமாக மாறியுள்ளது.  பல்வேறு பெண்களின் அமைப்பை சேர்ந்தவர்கள், இவரின் இந்த பேச்சை கடுமையாக கண்டித்துள்ளனர். 

அந்த அமைப்பினர் கூறும்போது, பெண்களுக்கு எதிராக சினிமா துறையில் பல கொடுமைகள் நடக்கிறது. பட வாய்ப்புக்கு நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள். இதையெல்லாம் அவர் கண்டிக்காதது ஏன்? என்று கூறுகின்றனர். 

அதே போல் டிவி நிகழ்ச்சி விவாதங்களில் கலந்து கொண்ட ஆண்கள் சிலர், எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் பேசியது தவறு இல்லை. பெண்கள் கவர்ச்சி உடை அணிவதால் தான் பாலியல் கொடுமைகள் நடக்கிறது என்பதை அவர் சொல்லியிருக்கிறார் என்று கூறியுள்ளனர். இந்த  எதிர்ப்பைத் தொடர்ந்து பாலசுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என பதிலடி கொடுத்துள்ளார்.