நடிகர் சூர்யா,  செல்வராகவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்த, NGK திரைப்படம் இன்னும் வெளிவராத நிலையில், இந்த படத்தை தொடர்ந்து  இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்களாக நடந்து வந்தது. ஏற்கனவே படத்தின் முக்கிய காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில்   ஆக்சன் காட்சிகளை,  செட் அமைத்து படமாக்கி வந்தனர். இதற்கு திலீப் சுப்பராயன், சண்டை காட்சி அமைத்து வந்தார்.

இந்த படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகள் அற்புதமாக வந்துள்ளதால்,  சூர்யா, தனது சொந்த செலவில் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.

இதற்கு முன் , தான் நடித்த படங்களில், இப்படியெல்லாம் பிரியாணி விருந்து கொடுக்காத சூர்யா, முதல் முறையாக இப்படி செய்து யூனிட்டை அசத்தினார். மேலும் அனைவருக்கும் அவருடைய கைகளாலேயே பரிமாறினார்.

பல வருடங்களாக அஜித் பின் பற்றி வரும் இந்த வழக்கத்தை தற்போது நடிகர் சூர்யாவும் கையில் எடுத்துள்ளார். என இதில் இருந்து தெரிகிறது. 

லைகா புரெடக்சன் தயாரிக்கும் இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யா, சமுத்திரகனி என பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ஆகஸ்ட் 15ல், வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளது படக்குழு.