பாலிவுட் நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது. சில சமயங்களில், இவர்கள் கொடுக்கும் பேட்டியில் சாதாரணமாக ஏதாவது ஒரு விஷயத்தை பகிர்ந்தால் கூட சில சமயங்களில் அது சர்ச்சையாக மாறிவிடும். அந்த வகையில் இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் படுக்கை அரை ரகசியத்தை கூறி அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார் நடிகை சோனம் கபூர்.

நடிகை சோனம் கபூர், தன்னுடைய காதலர் ஆனந்த் அஹுஜாவுவை கடந்த மே மாதம் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருடைய திருமணத்தில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

 திருமணம் ஆன ஒரு வாரத்திலேயே மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு அதிர்ச்சி கொடுத்த சோனம். திருமண தாலியை கையில் அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டு பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார்.

மேலும், நட்சத்திர விழாக்களில் மிகவும் ஆபாசமான உடைகளுடன் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சோனம் கபூர் ஒரு பேட்டியில் தன்னுடைய  கணவர் பற்றியும் படுக்கையரையில் அவரின் செயல்பாடுகள் குறித்தும் பேசியுள்ளார்.  இவர் இப்படி பேசியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக இவர் தன்னுடைய கணவர் படுக்கையறையில் கிரியேட்டிவ்வாக இருக்கமாட்டார் என கூறியுள்ளார். எப்போதும்  மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசிவிடும் சோனம் கபூர் இந்த விஷயத்தையும் இப்படி கூறியுள்ளது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.