செக்சுக்கு அழைத்த போது மறுத்த காரணத்தினால் எனது கணவர் என்னை கொலை செய்ய முயன்றதாக இந்தி பிக்பாஸ் நடிகை சோஃபியா ஹயாத் புகார் அளித்துள்ளார். பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் ரோமானியாவை சேர்ந்த விளாட் ஸ்டானெஸ்குவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கட்டிடங்களின் உள்வடிவமைத்து தொழிலை செய்துவந்த விளாட் ஸ்டானெஸ்குவை திருமணம் செய்வதற்கு முன், அவருடன் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்ற சோபியா ஹயாத், அவ்வபோது, கிலுகிலுப்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து இளைஞர்களை சூடேற்றி வந்தார்.

திருமணத்திற்கு பின்னரும் அவருடன் தனிமையில் இருந்த ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டு கிலுகிலுப்பை ஏற்படுத்திய சோபியா ஹயாத், கடந்த சில வாரங்களுக்கு முன் கணவர் விளாட்டை பிரிந்துவிட்டதாக கூறினார். அதைத் தொடர்ந்து விளாட் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய சோபியா ஹயாத், அவர் ஒரு பொய்யன் என்றும் திருடன் என்றும் விமர்சித்தார். விளாட்டுக்கு ஏற்கெனவே திருமணமானது தெரிந்து இருந்தும், அவரை நான் ஏற்றுக் கொண்டேன் என்றும், அவரது அனைத்துச் செலவுகளையும் தானே செய்ததாகவும் சோபியா ஹயாத் தெரிவித்ததுடன், தன்மூலமே விளாட் பிரபலமானதாகவும் கூறினார். மேலும், முதல் மனைவிக்கு பிறந்த மகனை பார்ப்பதற்காக தனது பணத்தில்தான், விளாட் ரோமானியாவுக்கு சென்றுவந்தார் என்ற சோபியா ஹயாத், தங்களது திருமண மோதிரத்தை ரூ.1.5 லட்சத்துக்கு விற்றது தெரிந்தபோது, நான் மிகவும் வேதனை அடைந்தேன் என்றும் கூறியுள்ளார்.விளாட் எவ்வளவு ஏமாற்றினாலும் தான், அவருக்கு நல்ல மனைவியாக நடந்து கொண்டதாக சோபியா கூறியுள்ளார். இதனால் தான் தாய்மை அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தான் தாய்மை அடைந்ததை பொருட்படுத்தாமல் விளாட், தொடர்ந்து தன்னை செக்சுக்கு அழைத்ததாக சோஃபியா கூறியுள்ளார். ஆனால் உடல்நிலையை கருத்தில் கொண்ட தான் செக்சுக்கு மறுத்த காரணத்தினால் கணவர் விளாட் தன்னை கழுத்தை நெறித்ததாக சோஃபியா கூறியுள்ளார். இதனால் தான் உயிரிழந்துவிடுவேன் என்று அஞ்சியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நல்லவேளையாக விளாட்டை பிரிந்துவிட்டதால் தான் தற்போது உயிரோடு இருப்பதாகவும் சோஃபியா தெரிவித்துள்ளார். விளாட்டை பிரிவதற்கு அவரது பொய் மட்டுமின்றி, அவரது அதீத காம ஆசையும் காரணம் எனக் கூறியுள்ள சோபியா ஹயாத், அதனாலே அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.