இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தில் இந்தியா 2வது இடத்தில் உள்ள நிலையில், 3வது இடத்திற்கு சென்றால் நிலைமை மேலும் மோசமாகி விடும். எனவே மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் திரைத்துறை அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. 

கோடிகளில் பணம் புரளும் சொர்க்க பூமியாக திரைத்துறை பார்க்கப்பட்டாலும், இங்கு தான் தினக்கூலியை நம்பி நாட்களை நகர்த்தும் சினிமா தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வரும் 31ம் தேதி வரை சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....!

இதையடுத்து நடிகர், நடிகைகள் ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி கொடுத்தால் தொழிலாளர்களுக்கு கஞ்சி சாப்பாடாவது போட முடியும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை கேள்விப்பட்ட உடனே நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். 

இதையும் படிங்க: "கை" தட்டும் போது கூட ரொமான்ஸா?... நயன் - விக்கி அக்கப்போரு தாங்க முடியலடா சாமி...!

இந்நிலையில் நடிகர் சிவக்குமார் குடும்பத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியின் கோரிக்கையை ஏற்று நடிகர்கள் நிதி அளித்து வருவது திரையுலகின் ஒற்றுமையையும், மனித நேயத்தையும் காட்டுகிறது.