தமிழ் சினிமாவில் சமீப காலமாக நடிகர்கள் அவர்களுடைய வாரிசுகளை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். விஜயின் மகள் தெறி படத்தில் ஒரு காட்சியில் நடித்தார். இதே போல் நடிகர் ஜெயம் ரவியின் மகன் 'டிக்டிக் டிக்' படத்தில் அறிமுகமானார். 

மேலும் நடிகர் சூரியின் மகன் தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் மகளும் குட்டி பாடகியாக அறிமுகமாக உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பாடகரும், நடிகருமான அருண்ராஜா காரமாஜ் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'கனா' இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அவருக்கு தந்தையாக சத்தியராஜ் நடிக்கிறார். பெண்களின் கிரிக்கெட்டை கருவாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் 'வாயாடி பெத்த புள்ள' என்று தொடங்கும் பாடலை தான் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியுள்ளார். மேலும் இந்த பாடலில் ஆராதனாவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோரும் பாடியுள்ளனர். இந்த பாடல் உள்பட அனைத்து பாடல்களும் நாளை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

................................................................................................. 
ஒரே நாளில் நடிகை சமந்தா நடித்த மூன்று படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால், ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

எப்போதாவது, சில நடிகைகள் நடித்த இரண்டு திரைப்படகள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பது எப்போதாவது நடக்கும். ஆனால் நடிகை சமந்தா நடித்த மூன்று திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது இதுவே தென்னிந்தியாவின் முதல் சாதனையாக கருதப்படுகிறது.

திருமணத்திற்கு பின் நடிகை சமந்தா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'சீமராஜா' இந்த திரைப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதே நாளில் சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'யூடார்ன்' படமும் வெளியாகவுள்ளது.

மேலும் இதே நாளில் நடிகர் மகேஷ்பாபு சமந்தா நடித்த 'சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லெ செட்டு' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் டப்பில் படமான 'நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' என்ற படமும் அதே நாளான செப்டம்பர் 13 ஆம் தேதியே ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஒரு நடிகையின் மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாவது தென்னிந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை என கருதப்படுகிறது. அதனால் இது சமந்தாவின் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.