Asianet News TamilAsianet News Tamil

எச்சரிக்கை! பெற்றோர் மற்றும் குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய சிவகார்த்திகேயன் வீடியோ!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கூட விழிப்புணர்வு பாடம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். அது போன்ற ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்து கொடுத்திருக்கிறார். 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கூட விழிப்புணர்வு பாடம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். அது போன்ற ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்து கொடுத்திருக்கிறார். 

பொதுவாக குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமானவர்கள் எளிமையாக ஒரு அறிவுறையை கூறும் போது அது மனதில் நன்றாக பதிந்துவிடும். அந்த வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது இந்த குறும்படம், சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்து கூறி இருப்பதுடன். யாரிடம் தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் இந்த குறும்படத்தினில் விளக்கி கூறி இருக்கிறார். இயக்குனர்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

என பாரதியின் வரிகளுடன் தொடங்கி , அதே வரிகளுடன் முடிகிறது இந்த குறும்படம். இந்த குறும்படம் ஒவ்வொறு பெற்றோரும் பார்க்க வேண்டியது. தங்கள் பிள்ளைகளுக்கும் காட்ட வேண்டியது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனும் கூட அதை தான் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார் “குழந்தைகளுக்கான விழிப்புணர்வு படம் இது , தயவுசெய்து இதை பாருங்கள், பகிருங்கள், உங்கள் நெறுங்கிய வட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க உதவிடுங்கள். விழிப்புணர்வுடன் இருக்கும் குழந்தை, எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்” என அந்த டிவிட்டர் பதிவில் பகிர்ந்திருக்கிறார்.

Video Top Stories