பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருக்கும் காலம் இது. பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் இதே நிலை தான். இதனால் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் தற்போது நிலவுகிறது. 

நடிகர் சிவகார்த்திகேயனும் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தன்னுடைய பங்கையும் இணைத்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படத்தை தொடர்ந்து இப்போது சிவகார்த்திகேயன் “நேற்று இன்று நாளை” திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். 

மேலும் இவர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உமேஷ் எடுத்துவரும் குறும்படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். இந்த குறும்படம் சேவை சார்ந்தது என்பதால் எந்த வித சம்பளமும் வாங்காமல் இதில் நடித்து கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 

இந்த குறும்படத்தில் சுமார் 40 குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றி குழந்தைகளுக்கு புரியும் வகையில் அவர் அதிரடியாக காலத்தில் இறங்கியுள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. பொதுவாகவே சிவகார்த்திகேயனை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு பிடித்தமான ஹீரோ ஒரு நல்ல விஷயத்தை சொல்லி தந்தால் அது அதிகம் ரீச் ஆகும் தானே.