சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் தமிழ்படம்2. ஸ்பூஃப் திரைப்படமாக வெளியாகி இருந்த இந்த படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கு காரணம் இதில் இடம் பெற்றிருந்த சினிமா ஸ்பூஃப் காட்சிகள் மட்டுமல்ல. அரசியல் காட்சிகளும் தான். இப்படத்தின் முந்தைய பாகத்தில் கோலிவுட்டில் ரிலீசாகிய ஒட்டு மொத்த சினிமாக்களையும் கலாய்த்திருந்த சி.எஸ்.அமுதன், இந்த முறை அரசியல் நிகழ்வுகளையும் கலாய்த்திருந்தார்.

இந்த கலாய்க்கும் படலத்தில் அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கூட விட்டு வைக்கவில்லை. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவா தற்போது ஒரு காமெடி வீடியோவை வெளியிட்டிருக்கிறார். யுவன் தயாரித்திருக்கும் “பியார் பிரேமா காதல்” திரைப்படத்தின் பிரமோஷனுக்காக அந்த காமெடி வீடியோவை தயாரித்திருக்கின்றனர்.

 

Avanga sondhama kadhaya yosikiranga Padam pandraanga.neengalum Adhu madhri work pannunga appo paapom 👍🏼 https://t.co/Tqi0jx7OY9

— Shiva (@actorshiva) August 1, 2018

அதில் சிவாவின் நடிப்பை பார்த்துவிட்டு, இந்த நடிப்பை தான் நான் என்னோட படத்திலயும் நடிக்க சொன்னேன். ஆனா நீங்க அத ப்யார் பிரேமா காதலுக்கு கொடுத்துட்டீங்க என கூறி கமெண்ட் செய்திருக்கிறார் அமுதன்.

இதனை தொடர்ந்து அதற்கு பதிலளித்த சிவா ,அவங்க சொந்தமா கதை பண்றாங்க நீங்களும் அதே மாதிரி சொந்த கதையில் படம் பண்ணுங்க அப்போ நடிக்கிறேன் என கூறி அமுதனை கேலி செய்திருக்கிறார்.