கேரள நடிகையும், பிரபல பாடகியுமான மஞ்சுஷா மோகந்தாஸ் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் ஸ்டார் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் தன் முழுத்திறமையும் வெளி உலகிற்கு காண்பித்தவர் இவர்

இவருடைய குரலின் மூலம் ஏராளமான ரசிகர்களை ஈர்த்து உள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்த பாடகி, ஒரு சில படங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில், அடுத்தக்கட்ட  நகர்வை நோக்கி சென்ற மஞ்சுஷா, தன் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சாலை விபத்தில் சிக்கினார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நடந்த  இந்த விபத்தில் சிக்கிய மஞ்சுஷா அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி மஞ்சுஷா உயிரிழந்தார். இவர் திருமணமானவர். இவருக்கு இரண்டு வயதில் மகள் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இவ்வளவு திறமை வாய்ந்த மஞ்சுஷா, மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த மஞ்சுஷாவின் மறைவு அனைவரையும் மிகுந்த வருத்தம் கொள்ள செய்து உள்ளது.