90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இடையழகி சிம்ரம். விஐபி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தன்னுடைய அழகால் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார். 

விஜய், அஜித், சூர்யா, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் இவருக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. எனவே அப்போதைய முன்னணி நடிகைகளுக்கு டஃப் காம்பட்டீஷன் கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்த போதிலும், ஒரு படத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமையவில்லை. 

சிம்ரம் தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கி, 20 வருடங்கள் ஆன நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற சிம்ரனின் கனவு நிறைவேறியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளார் என்கிற அதிகார பூர்வ தகவல் நேற்று வெளியானது. இதனால் நடிகை சிம்ரன் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்த சில நடிகைகளுக்கு கார்த்தி சுப்புராஜின் இந்த முடிவு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.