இதற்கு முன்னர் சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட சிம்புவின் பிடியில் லேட்டஸ்டாக மாட்டியிருப்பவர்கள் ‘பிக் பாஸ்’ நட்சத்திரங்களான ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா ஆகியோர்.

இந்த பிக்பாஸ் ஸ்வீட்டிகளை, நிகழ்ச்சி முடிந்தவுடன் சுடச்சுட கைப்பற்றுவதற்காகவே, ஜியார்ஜியாவில் நடந்துகொண்டிருந்த சுந்தர்.சி.யின் படப்பிடிப்பை ஒரே ஒரு பாட்டோடு பேக் அப் பண்ணிவிட்டு சென்னை பறந்துவந்தாராம் சிம்பு.

மேற்படி நட்சத்திரங்களின் ட்விட்டர் பக்கங்களில் நேற்றைய தினம் முழுக்க வழிந்தோடியவை வம்புத்தம்பி சிம்புவுடன் ‘செக்கச்சிவந்த வானம்’ படம் பார்த்த காட்சிகள்.

விசயம் அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. தினமும் வானம் சிவந்த பிறகு மேற்படி பிக்பாஸிகள் வம்புத்தம்பியுடன் நள்ளிரவுப் பார்ட்டிகளில் அவசியமாய் ஆஜராகிவிடுகிறார்களாம்.

சிம்புவோடு சுற்றினால் அடுத்த நயன்தாரா ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

 இன்னொருபக்கம் இடையில் கொஞ்சம் குறைந்திருந்த சிம்புவின் சேட்டைகள் மறுபடியும் விஸ்வரூபம் எடுப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் ஒருவேளை டி.ராஜேந்தர் தனது ஜாகையை மாநில அரசியலிலிருந்து மத்திய அரசுக்கு ஷிஃப்ட் செய்கிறாரோ என்னவோ?