சிம்பு ‘கெட்டவன்’ ஓ.கே.... நீ அவரால் கெடுக்கப்பட்டவளா...? நடிகையை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
சில நாட்களுக்கு முன் இந்திப்பட இயக்குநர் விகாஷ் பால் குறித்து ’மி டு’ பஞ்சாயத்தில் அபாண்டமான சில குற்றச்சாட்டுகளைக் கூறி, ‘தமிழ்ப்படம் ஒன்றில் கூட எனக்கு செக்ஸ் டார்ச்சர் நடந்தது.
சில நாட்களுக்கு முன் இந்திப்பட இயக்குநர் விகாஷ் பால் குறித்து ’மி டு’ பஞ்சாயத்தில் அபாண்டமான சில குற்றச்சாட்டுகளைக் கூறி, ‘தமிழ்ப்படம் ஒன்றில் கூட எனக்கு செக்ஸ் டார்ச்சர் நடந்தது. அது குறித்து பின்னர் வெளியிடுகிறேன்’ என்று சஸ்பென்ஸ் வைத்திருந்த நடிகை லேகா வாஷிங்டன் நேற்று ட்விட்டரில் அந்த நல்லவரை ‘கெட்டவன்’ என்ற ஒற்றை வார்த்தையில் வெளிப்படுத்தினார்.
லேகா வாஷிங்டன் தமிழில் ‘உன்னாலே உன்னாலே’ என்ற படத்தில் அறிமுகமாகி ‘ஜெயம்கொண்டான்’ வா குவார்ட்டர் கட்டிங்’ கல்யாண சமையல் சாதம்’ உட்பட சொற்ப படங்களில் நடித்து ஒதுங்கிக்கொண்டவர். இவர் சிம்புவுக்கு ஜோடியாகக் கமிட் ஆகி அதே சூட்டோடு டிராப் ஆன படம் ‘கெட்டவன்’
ஸோ, ஒரு சிறிய க்ளூ கூட தேவைப்படாமல், அது சிம்புவைப் பற்றித்தான் என்று தெரிந்துகொண்ட ரசிகர்கள் லேகா வாஷிங்டனை மிகக்கேவலமாக வறுத்தெடுத்துவிட்டார்கள். ‘ நீ ஒரு விளம்பர வெறி பிடித்தவள்’ என்றும் ‘சரி எங்க ஆள் கெட்டவன் ஓ.கே. நீ அவரிடம் கெட்டவள்தானே?’ என்ற ஒரு சில கமெண்ட்களைத்தவிர மீதி 99 சதவிகிதம் பிரசுரிக்கத் தகுதியற்றவை.