மீண்டும் ஒன்று சேர்ந்த சிம்பு - தனுஷ்! 12 மணிக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்! வீடியோ வெளியானது!

நேற்று இரவு 12 மணிக்கு நடந்த நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், தனுஷ் கலந்து கொண்டு இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

First Published Feb 3, 2019, 1:31 PM IST | Last Updated Feb 3, 2019, 1:44 PM IST

நேற்று இரவு 12 மணிக்கு நடந்த நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், தனுஷ் கலந்து கொண்டு இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும், நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால் ஒரு சில காரணத்தால் இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு,  பிரிந்தனர். ஒரே நிகழ்ச்சில் கலந்து கொண்டால் சரியாக இவர்கள் பேசிக்கொள்வது இல்லை. 

இந்நிலையில் தற்போது இவர்களுடைய சண்டை முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம் பல பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, மஹத், ஹரீஷ் கல்யாண், நடிகைகள் யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும் STR என எழுதப்பட்டிருந்த கேக்கை சிம்பு வெட்டியவுடன், தனுஷ், ஜெயம் ரவி, யுவன் உள்ளிட்டவர்களுக்கு ஊட்டினார். இந்த வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதில் இருந்து சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோருக்குள் இருந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது தெரிகிறது. 
 

Video Top Stories