ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காற்றின் மொழி' படத்தில் நடிகர் சிலம்பரசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்த காட்சிகளுக்காக தற்போது சிம்பு டப்பிங் பேசி முடித்துள்ளார். 

இந்தியில் நடிகை வித்யா பாலன் நடித்த 'தும்ஹாரி சுலு' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜோதிகா நடிக்கும் இந்த படத்தை பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளார்கள் .

இப்படத்தில் FM ரேடியோ ஷோ ஒன்றில் பணிபுரியும் பெண்ணாக ஜோதிகா நடித்துள்ளார். அவருடன் திரைப்பட நட்சத்திரமாகவே சிம்பு தோன்றுவது போல் காட்சி இடம் பெறுகிறது. இந்த சீன் குறித்து கேட்டதும் சிம்புவுக்கு மிகவும் பிடித்து விட்டதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம். மேலும் ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி என்றும் அவர் மேல் தனக்கு பெரிய மரியாதை உண்டு என உடனடியாக இந்த காட்சியை நடித்துக்கொடுத்தாராம் சிம்பு .

இந்த படத்திற்காக டப்பிங் பேசி முடித்த சிம்பு தன்னுடைய காட்சி சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும், சிம்பு  இந்த படத்தில் பணியாற்றியது படத்துக்கு பெரிய பலம் என தாயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறினார்.  

காற்றின் மொழி போஸ்ட் புரொடக்சன் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . வருகிற அக்டோபர் 18 ஆயுத பூஜை சிறப்பு வெளியீடாக வெளியாகவுள்ளது இத்திரைப்படம். அக்டோபர் 18 நாயகி ஜோதிகாவின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.