சில்க் சுமிதாவின் நினைவு தின வீடியோ தொகுப்பு:
நடிகை சில்க் சுமிதாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது அந்த அளவிற்கு ரசிகர்கள் ரசிக்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியவர்.
நடிகர் வினு சக்கரவர்த்தியால் வண்டி சக்கரம் படத்தில் அறிமுகம் ஆன இவர், தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிய சில்க் சுமிதாவின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று... இது குறித்து ஏசியா நெட் தமிழ் வழங்கும் சிறப்பு வீடியோ தொகுப்பு...