நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற வனிதா விருதுவிழாவில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

இசையமைப்பாளர், பின்னணி பாடகி என தமிழ் திரையுலகத்தில் அறிமுகமான உலகநாயகன் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன் பின், சூர்யா நடித்த '7 ஆம் அறிவு' படத்தின் மூலம் நடிகையாக மாறினார். இந்த படத்தில் இவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பின் விஜயுடன் புலி, அஜித்துடன் வேதாளம் என முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பதில் தன்னுடைய கவனத்தை திருப்பி விட்டார். படம் தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

மேலும் முன்னணி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'ஹெலோ சகோ' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல்வேறு வேலைகளிலும் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது.. காதலருடன் எடுத்து கொள்ளும் புகைப்படம் மற்றும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடவும் அவர் தவறுவது இல்லை.

அந்த வகையில் தற்போது, இவர் கொச்சியில் நடந்த வனிதா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள கவர்ச்சியில் உடையில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.