தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தில் இருந்து தளபதி விஜய், தனுஷ், விக்ரம், ஜீவா என முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போன்ற நிறமும், இருக்கா, இல்லையான்னே தெரியாத இடையை வளைத்து ஆடும் ஆட்டமும் தான் ஸ்ரேயாவிடம் ரசிகர்களை கவர்ந்த விஷயம். 

கடந்த ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்ற ரஷ்ய தொழிலபதிரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் "சப் குஷல் மங்கள்" என்ற இந்தி படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார் ஸ்ரேயா. அக்‌ஷய் கண்ணா நடித்துள்ள அந்த படத்தில், "நயா, நயா" என தொடங்கும் குத்து பாட்டிற்கு ஸ்ரேயா ஆடியுள்ள நடனம் தற்போது யூ-டியூப்பில் வைரலாகி வருகிறது. 

உடலை வளைத்து நெளித்து தனது ஸ்டைல் கிளாமர் ஆட்டம் போட்டுள்ளார் ஸ்ரேயா. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்ரேயாவின் கவர்ச்சி ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து போயுள்ளனர். அதில் செம்ம ஹாட்டாக உள்ள ஸ்ரேயாவை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலரும் திரும்ப, திரும்ப அந்த பாடலை கண்டு ரசித்து வருகின்றனர். 

அப்படி ஸ்ரேயா போட்ட கிளாமர் ஆட்டம் இதோ....