தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா என்ற ஒற்றை வார்த்தை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பை கண்டு மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் தான் இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் புயல் வேகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. 


ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சுழட்டி அடிக்கும் கொரோனா வைரஸிற்கு ஸ்பெயின் இளவரசி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என யாரையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. 

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் மற்றும் அவரது மனைவி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரபல பாடகர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: அரை டவுசருடன் குலுங்கி, குலுங்கி ஆட்டம் போடும் நடிகை ரித்திகா சிங்... வைரலாகும் வீடியோ...!

கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல பாடகர் ஜோ டிப்பி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 61 வயதாகும் டிப்பிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க:  தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!

தான் சாகும் கடைசி தருவாயில் கூட, "நான் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறேன். எனது குடும்பமும் நானும் தமிமையில் தான் உள்ளோம். எனது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் விழிப்புடன் இந்த நோயை எதிர்த்து போராட வேண்டும்" என்று முகநூலில் பதிவிட்டிருப்பது கண்ணீரை வரவழைக்கிறது.