படப்பிடிப்புத் தளத்தில் மகளுக்கு பிறந்த நாள் கொண்டாடிய ஷோபி!(வீடியோ)
தன்னுடைய மனைவியின் வளை காப்பு நிகழ்ச்சி மூலம் தமிழ்த் திரையுலகினர் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் நடன இயக்குனர் ஷோபி. அதையும் தாண்டி தன்னுடைய மகள் அக்ஷயாவின் முதல் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக நடத்தினர்.
இன்றோடு அக்ஷயாவிற்கு இரண்டாவது வயது முடிகிறது. இந்தப் பிறந்த நாளை சற்று வித்தியாசமாக கலகலப்பு 2 படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாடியுள்ளனர் ஷோபி மற்றும் லலிதா தம்பதியர்.
இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் சுந்தர் சி, குஷ்பு, இவர்களுடைய மகள்கள், மற்றும் இந்தப் படத்தின் நாயகன் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி போன்ற பலர் கலந்து கொண்டனர்.