சல்மான் கானுடன் யாருக்கும் தெரியாமல் உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். 

சல்மான் கானும், ஷில்பா ஷெட்டியும் அவ்ஜார், கர்வ் பிரைடு அண்ட் ஹானர், பிர் மிலேங்கே, கார்கே பாஸ் கயா யார் ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் இருவரும் மிகவும் நட்புடன் பேசிப் பழகுவர். இதன் பின்னர் பிரிட்டன் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷில்பா ஷெட்டி பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். இந்த தம்பதியருக்கு வியான் குந்த்ரா என்ற 6 வயது மகன் உள்ளார். தற்போது அமேஸான் பிரைமில் ஹியர் மி லவ் மி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். 

இந்த நிலையில், ஷில்பா ஷெட்டியும், சல்மான் கானும், சேர்ந்து நடித்த போது டேட்டிங் சென்றதாக கிசுகிசுப்பு எழுந்த வண்ணம் இருந்தது. சல்மான் கான் – ஷில்பா ஷெட்டி இடையே ரகசிய உறவு இருந்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது. இதற்கு தற்போது ஷில்பா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஷில்பா ஷெட்டி, சல்மான் கானுடன் ஒரு போதும் டேட்டிங் சென்றதில்லை என்றும், படப்பிடிப்பின் போது இருவருக்குள்ளும் நல்ல நட்புணர்வு மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். சல்மான் கான் மிகவும் அன்பானவர், மனித நேயம் மிக்கவர் என்றும் புகழ்ந்துள்ளார் ஷில்பா ஷெட்டி.

 

நள்ளிரவில் தாம் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் சல்மான் கான் வருவார் என்றும், அப்போது அவரும், தமது தந்தையும் சேர்ந்து மது அருந்துவர் என்று நினைவு கூர்ந்தார் ஷில்பா. தமது தந்தை காலமான பின்னரும் இதேபோல் நள்ளிரவில் வந்த சல்மான் கான், நேராக மது அருந்தும் இடத்திற்கு சென்று, தலை கவிழ்ந்து கொண்டு, தனது தந்தையை நினைத்து அழுததையும் குறிப்பிட்டார் ஷில்பா ஷெட்டி.. எனவே சல்மான் கானுடன் தனக்கு உறவு இருந்ததாக  கூறப்படுவது வெறும் வதந்தி தான் என்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் ஷில்பா ஷெட்டி.