’நிர்வாணமாக போஸ் கொடுக்கிறேன் என்பதற்காக எல்லாத் தவறுகளுக்கும் உடன்படுவேன் என்று அர்த்தமல்ல. அப்படிப்பட்ட கெட்ட எண்ணத்துடன் இந்தித்திரையுலகில் ஏகப்பட்ட மிருகங்கள் அலைகின்றன. அவர்களிடமிருந்து தப்பி வாழ்வது பெரும்பாடாக இருக்கிறது’ என்கிறார் பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா.

தமிழில் ‘’யுனிவர்சிட்டி’’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியவர், ஷெர்லின் சோப்ரா. இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ள அவர்,  ‘’காமசூத்ரா’’ 3டி படத்திலும் நடித்தார். சமீபத்தில் ஷெர்லின் சோப்ரா புதிய பாடல் வீடியோ வெளியிட்டார். அப்போதுஅவர் கூறியதாவது: திரையுலகில், குறிப்பாக பாலிவுட்டில் ஏராளமான  செக்ஸ் மிருகங்கள் இருக்கிறது. சினிமா வாய்ப்பு தேடி நடிக்க வரும் பெண்களை அவர்கள், ‘’டின்னருக்கு (இரவு விருந்து) வருகிறாயா? வேலை விஷயமாக உன்னிடம் பேச வேண்டும்’’  என்று அழைப்பார்கள். ஆனால், உண்மையில் அதற்கான அர்த்தம் வேறு. 

அன்று இரவு அவருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்கான சீக்ரெட் வார்த்தைதான், டின்னர். நான்  சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் இது எனக்குப் புரியவில்லை. ஆனால் இப்போது, டின்னர் என்ற வார்த்தையைக் கூட காதில் கேட்க நான் விரும்பவில்லை. இனி என் வாழ்க்கையில்,  ‘’டின்னருக்கு வா’’ என்ற அழைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் கூறியிருப்பது, பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தனது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷெர்லின் சோப்ராவின் ‘துனு துனு’ இசை ஆல்பம் 8 மில்லியன் பார்வையாளர்களை வசீகரித்த நிலையில் தனது ரசிகர்களுக்காக செக்ஸியான குறும்படம் ஒன்றை மிக விரைவில் இயக்கவிருக்கிறாராம்.