பாலிவுட் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களின் வாரிசுகள் கால் பதிக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த மாதம், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடித்த 'தடாக்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் விரைவில், நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

அதனை உறுதி படுத்தும் விதத்தில் தற்போது 'வோக்' என்கிற பிரபல பத்திரிக்கையின்  அட்டை படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ளார் சுஹானா. 

இதில் இவரின் புகைப்படத்தை பார்த்து பலர் வியர்ந்துள்ளனர். காரணம் மிகவும் அனுபவம் வாய்ந்த மாடலைப்போல் போஸ் கொடுத்துள்ளார் என்று புகழும் அளவிற்கு அவர் அசைவுகள் இருக்கிறது.

பின் இதுகுறித்து பேசியுள்ள சுகானா கான், இந்த போடோ ஷூட் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், தன்னுடைய எதிர்ப்பார்ப்பை விட அருமையாக வந்திருப்பதாகவு கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய ஆசையை எப்போதும் புரிந்து கொண்டு தன்னுடைய பெற்றோர் அதனை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

சுஹானா கானின் இந்த போட்டோ ஷூட் குறித்து நடிகர் ஷாருக்கான்... எப்போது தன்னுடைய மகளை நடிகையாக பார்ப்பேன் என்கிற நினைப்பை வரவைத்துள்ளது என கூறியுள்ளார்.

ஏற்கனவே சுஹான, ஷாருக்கானின் நெருங்கிய நண்பர் கரன் ஜோஹர் இயக்கி தயாரிக்க உள்ள படத்தில் அறிமுகமாக உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் இது நிஜமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.